சுவாதி – நந்தீஷ் சாதி ஆணவப்படுகொலை கண்டண முழக்கங்கள்

சுவாதி – நந்தீஷ் சாதி ஆணவப்படுகொலையைக் கண்டித்து நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டண முழக்கங்கள்:

தமிழகமே !  தமிழகமே !

சாதி ஆணவப்படுகொலைக்கு

தர்மபுரி இளவரசன்

நாமக்கல் கோகுல்ராஜ்

உடுமலைப்பேட்டை சங்கர்

ஓசூர் நந்தீஷ்-சுவாதி

எத்தனை உயிரை எடுக்கப்போகிறாய் ?

ஊருக்கொரு ஆளென்று

கொலைப் பட்டியல் தொடருது!

சுவாதியும் நந்தீசும்

கருவிலிருந்த குழந்தையும்

சாதிவெறியின் கோரத்தால்

படுகொலை ! படுகொலை !

சாதிவெறிக் கொலைகளின்

கூடாரமா தமிழ்நாடு?

மனிதம் கொன்று சாதி வளர்க்கும் 

காட்டுமிராண்டி சமூகமா?

வெட்ககேடு வெட்ககேடு

தமிழகமே வெட்ககேடு!

 

முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்!

சாதி ஆணவக் கொலைகளுக்கு

முடிவுகட்டுவோம்! முடிவுகட்டுவோம்!

உறுதியேற்போம்! உறுதியேற்போம்!

சாதிவெறி ஊட்டுகின்ற

அரசியலை முறியடிக்க

உறுதியேற்போம்! உறுதியேற்போம்!

உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்!

எல்லோரும் நிகரென்று

உரக்கச் சொல்வோம்! உரக்கச் சொல்வோம்!

சூளுரைப்போம்! சூளுரைபோம்!

சாதி மறுப்பு இணையர்களைப்

பாதுகாக்க சூளுரைப்போம்!

முடிவெடுப்போம்! முடிவெடுப்போம்!

சாதிவெறி அரசியலா?

சனநாயக அரசியலா?

இரண்டிலொன்று பார்த்திட

முடிவெடுப்போம்! முடிவெடுப்போம்!

துணைபோகாதே ! துணைபோகாதே !

சாதி ஆதிக்க சக்திகளுக்கு

தமிழக அரசே! துணைபோகாதே !

தமிழக அரசே! தமிழக அரசே!

சாதி ஆணவக் கொலைக்கு எதிராய்

 தனி சட்டம் இயற்றிடு ! 

கைதுசெய்! கைதுசெய்!

கொலை செய்த கூலிப்படையை

உடனடியாக கைதுசெய்!

பதிவுசெய்! பதிவுசெய்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்

வழக்கினைப் பதிவுசெய்!

விரைவுப்படுத்து! விரைவுப்படுத்து!

குற்றப்பத்திரிக்கை தாக்கலை

தாமதமின்றி விரைவுப்படுத்து!

அமைச்சர்களே, அமைச்சர்களே

ஊர்ப்பணத்தைக் கொள்ளையிட்டு

ஊர்வம்புப் பேசிக்கொண்டு

ஊர்வலம் போவதற்கா

அமைச்சர் பதவி உங்களுக்கு?

பன்னாட்டு முதலாளியின்

ஈட்டத்தைக் காக்கவா?

இந்நாட்டு மக்களின்

உயிருடைமை காக்கவா?

எதற்கு இந்த காவல்துறை?

யாருக்காக காவல்துறை?

இம் என்றால் சிறைவாசம்!

உம் என்றால் பொய்வழக்கு

மக்களுக்கு சர்வாதிகாரம்

சாதிவெறிக்கு சாமரமா?

எடப்பாடி பழனிச்சாமியே!

மெளம் ஏன், தயக்கம் ஏன்?

சாதி ஆணவக் கொலைகளை

கண்டிக்க தயக்கம் ஏன்?

அச்சமா? அச்சமா?

சாதிவெறிக்கு அச்சமா?

துச்சமா? துச்சமா?

மக்களுயிர் துச்சமா?

கண்டித்திடு! கண்டித்திடு!

சாதி வெறிக் கூட்டத்தை

கண்டித்திடு! கண்டித்திடு!

இயற்றிடு! இயற்றிடு!

சாதி ஆணவக் குற்றம் தடுக்க

தனிச்சட்டம் இயற்றிடு!

துணைபோகாதே! துணைபோகாதே!

சாதிவாக்கு வேண்டுமென்று

கொலைக்குதுணைப் போகாதே!

ஆணவக் கொலைக்கு எதிரான

நீதிமன்ற வழிகாட்டலை

உடனடியாக செயல்படுத்து!

தமிழர்களே! தமிழர்களே!

சாதியைக் கட்டியழுதால்

நாதியற்று போவோம் நாம்!

பெற்றெடுத்த மகளையும்

மணம்முடித்த மருமகனையும்

மகள் வயிற்றுப் பிள்ளையையும்

கொல்லச் சொல்லும் சாதிவெறி!

சாதிவெறிப் போதையது!

தாயுணர்ச்சிக் கொன்றுவிடும்

தந்தையுணர்ச்சிக் கொண்றுவிடும்

மாந்தநேயம் கொன்றுவிடும்!

பழக்கமாம்! வழக்கமாம்!

வழக்கறிஞர் வேலையும்

மருத்துவப் படிப்பும்

மக்களவைப் போவதும்

எந்த சாதிப் பழக்கமய்யா?

பாட்டன் முப்பட்டான்

பட்டப் படிப்பு படிச்சானா?

இட ஒதுக்கீடு வாங்கிக்கிட்டு

அரசு வேலைக்குப் போனானா?

எல்லாமே மாறும்போது

மணமுறைதான் மாறாதா?

மந்திரிப்பதவி வாங்கிகிட்டு

யார்யாரோ சொத்துசேர்க்க

சாதிமயிரத் தூக்கிக்கிட்டு

தலைமேல சுமக்கனுமா?

மானம்போச்சு என்றுசொல்லி

மல்லுகட்டும் ஊர்க்காரன்

நீ பெத்த மகளத்தான்

சோறூட்டி வளத்தானா?

வேலையில்லை! வேலையில்லை!

கோடிபேருக்கு வேலையில்லை!

விலையில்லை! விலையில்லை!

விவசாயிப் பொருளுக்கு

விலையில்லை! விலையில்லை!

வெட்கமில்லை! வெட்கமில்லை!

தமிழ்நாட்டுத் தலைமேல

5 லட்சம் கோடி கடன்

யாருக்கும் வெட்கமில்லை!

சாதிக்கொரு பெருமையாம்!

குலத்துக்கொரு கெளரவமாம்!

சாதிய ஆணவத்தால்

நிறையாது! நிறையாது!

உன்வயிறு நிறையாது!  

சாதிய ஆணவத்தால்

குளிராது! குளிராது!

உன் மனசு குளிராது!

சாதிதீயை மூட்டி

குளிர்காயும் கும்பலுக்கு

பதவி பவிசெல்லாம்

வந்ததுதான் மிச்சம்!

ஓட்ட வித்துப்புட்டு

உரிமையை அடகுவச்ச

நீயெல்லாம் துச்சம்!

தமிழர்களே! தமிழர்களே!

சாதியைக் கட்டியழுதால்

நாதியற்று போவோம் நாம்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *