தொழிலாளர் சட்டங்கள் நீக்கத்தை அனுமதியோம் ! தடையற்ற உழைப்பு சுரண்டலுக்கு முடிவுகட்டுவோம்!
பல தலைமுறை கால தொழிலாளர் போராட்டங்களால் பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை தற்போதைய பெருந்தொற்றுநோய் நெருக்கடியை காரணமாக காட்டி, நீர்த்துப்போகச்செய்யவும்/ இடைநீக்கம் செய்யவும் பல்வேறு மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை சாத்தியுமுள்ள அனைத்து கடுமையான சொற்களாலும் மாசா கண்டிக்கிறது.
அனைத்து நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், வணிகங்களுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிப்பதில் விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அவசர சட்டமானது, தொழிலாளர்கள் நலனின் பேரிலான குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம், தொழில்துறை தகராறு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், போனஸ் செலுத்துதல் சட்டம், மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் ஆகிய அனைத்து சட்டங்களையும் செல்லாதவையாக ஆக்கிவிட்டது.
இந்த அவசர சட்டம் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் தொழில்துறை தகராறு சட்டத்தின் பிரிவு 25 ஐத் தவிர அனைத்து விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன, வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, 50 க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் தொழிற்சாலை ஆய்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன, தொழிற்சாலைகளில் 100 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களில் மத்தியப் பிரதேச தொழில்துறை வேலைவாய்ப்பு (நிரந்தர உத்தரவு) சட்டத்தின் கீழ் விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன, நிலையான கால வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது, தொழிலாளர் சட்டங்களின் கீழ் பல்வேறு பதிவேடுகளுக்கு பதிலாக ஒரு பதிவேட்டை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ், 13 க்கு பதிலாக ஒரு வருமானத்தை தாக்கல் செய்யவும் மேலும் தொழிற்சாலைகளுக்கு மூன்று மாத காலத்திற்கு ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் புது திட்டங்களை ஏதேனும் ஒரு நிறுவனம் தொடங்கி அவை தொடர்ச்சியாக 1,200 நாட்களுக்கு வேலை செய்தால் அந்நிறுவனத்திற்கு தொழிலாளர் சட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்கிற யோசனை உள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, அறிவித்துள்ளார். தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 51,52,54,56 க்கு மகாராஷ்டிர அரசு விலக்கு அளித்துள்ளது மற்றும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை நேரத்தை நீட்டிக்க அனுமதித்துள்ளது. தொழில்களில் நிலையான கால வேலைவாய்ப்பை அறிமுகப்படுத்தவும், தொழிற்சாலைகள் சட்டத்தை அமல்படுத்த குறைந்தபட்ச தொழிலாளர்களின் எண்ணிக்கையை 10 முதல் 20 ஆகவும் (மின்சார இணைப்புள்ளவை) மற்றும் 20 முதல் 40 வரை (மின்சார இணைப்பு இல்லாதவை) உயர்த்தியுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 20 விருந்து 50 ஆக உயர்த்தி அவர்களின் வேலை நேரத்தையும் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. இதர மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களும் தொழிற்சாலை சட்ட திருத்தம் கொண்டு வந்து கடந்த மாதத்திலிருந்து தொழிலாளர்களின், வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்கு உயர்த்தியுள்ளது..
இந்த மாற்றங்கள் அனைத்தும் தொற்றுநோய்க்காலச் செலவு மற்றும் அதன் நெருக்கடியை தொழிலாளர் வர்க்கத்திற்கு மாற்றுவதற்கும், முதலாளிகளின் நலன்களையும் இலாபங்களையும் பாதுகாப்பதற்கும், பாராளுமன்றத்தைத் தவிர்த்து, தொழிலாளர் விரோத தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை விரைவாகச் செயல்படுத்தவும் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்துவது என்பது தொழிளாலர்களுக்கு எதிரான சூழ்ச்சியே.இது வேலை இழப்பை அதிகரிக்கும், வேலை பாதுகாப்பை ஒழிக்கும், தொழிற்துறை பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் மற்றும் தொழில்துறை விபத்துக்களை அதிகரிக்கும் மேலும் அனைத்து சட்டப் பாதுகாப்பு வலையத்திலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வெளியேற்றும், மேலும் உற்பத்தியில் பத்திர முறை ஒப்பந்த நடைமுறையை கொண்டு வரும். இது அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியமான வேலைக்கான தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் ஆதாயங்களை நூறு ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளும்.
இந்தியாவின் தொழிலாளர் வர்க்கம், கொரோனா நெருக்கடி காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம், ஊதிய பிடித்தம், உணவு தட்டுப்பாடு, தங்குமிடபற்றாக்குறை என பல்வேறு நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறார்கள். தேச வளத்தை உருவாக்கிய தொழிலாளர்களின் நிலை தற்போது கடும் நெருக்கடிக்குஉள்ளாகியுள்ளது.
குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சூழலில், தொழிலாளர் நலச் சட்ட விலக்கு நடவடிக்கைகள் தொழிலாளர்களின் நெருக்கடியை பன்மடங்காக பெருக்கி விடும்.
ஆகவேதான் கோவிட் 19 நெருக்கடி காரணமாக பல்வேறு மாநில அரசாங்கங்களின் தொழிலாளர் விரோத அனைத்து சட்டங்களும் / உத்தரவுகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு மாசா கோருகிறது.
நெருக்கடியின் இந்த நேரத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் – பாதுகாப்பான வேலைகள் மற்றும் அனைவருக்கும் முழு சம்பளம், முழு சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்கான சட்டம் மற்றும் அவர்கள் இலவசமாக வீடு திரும்புவதற்கான வசதி மற்றும் அவர்களின்பாதுகாப்புக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளையும் கோருகிறோம். தொழில்துறை பாதுகாப்பு போன்றவற்றுக்கான வலுவான நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் இந்த உரிமைகளுக்காகப் போராடுவதற்காகவும், அனைத்து தொழிலாளர்களையும், அனைத்து உழைக்கும் மக்களையும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் அழைக்கிறோம்.
சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் எழுந்து நின்று இந்த உரிமைகளுக்காக போராட வேண்டும். தற்போது நாம் நீதிமன்றங்கள் வழியாகவும் மற்றும் சாத்தியமாகும் அனைத்து வழிகளிலும் போராடுவோம். இயன்றவரை பொறுப்புடன், இந்த போராட்டத்தை வீதிகளுக்கு நகர்த்துவோம்.
சோசலிச தொழிலாளர் மையம் – MASA
9940963131